Total Pageviews

103205

Sunday, March 5, 2017

நெடுவாசல் விமர்சனம்

 நெடுவாசல் விமர்சனம் :

உலகமே ஒரு நாடக மேடை நாம் எல்லாம் அதில் நடிகர்கள் ,

இன்றைக்கு நம்ம பாக்க போற விமர்சனம் எந்த படத்தோடதுனா  , சமீபத்துல ரிலீஸ் ஆகி வெற்றிகரமா ஓடிட்டு இருக்க நெடுவாசல் படத்தை பத்தி தான் .
ஆமா மாணவர்களின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற வாடிவாசல் படத்துக்கு அப்புறம் அவங்க முயற்சி பண்ணி இருக்க படம் தான் இந்த நெடுவாசல் .சரி வாங்க இப்ப விமர்சனதுக்குள்ள போகலாம்.

 போன படத்துல  பணியாற்றிய அந்த குழுவ அப்படியே இந்த படத்துலயும் தக்க வச்சிக்கினாங்க  ஒரு சில மாற்றங்கள் தவிர . அதுல குணசித்திர வேடத்துல நடிச்ச மிக்ச்சர் செல்வம் இப்ப பெரிய ஹீரோ ஆனதுனால அவர் கால் சீட் கிடைக்கில . அடுத்ததா ஆர் ஜே லாலாஜி போன படத்துல ஓவர் ஆக்ட்டிங் பண்ணி சொதப்பி னதால அவருக்கும்  வாய்ப்பு கிடைக்கல .

போன படத்துல சிட்டி பேஸ்ட் சப்ஜெக்டா இருந்துச்சி அதனால இந்தத்தடவ கிராமம் பக்கம் போய் இருக்காங்க.  படத்துல நேரிய புது ஹீரோக்கள் வராங்க , இத பார்க்கும் போது எதிர்கால இண்டஸ்ட்ரி நல்லா இருக்கும்னு தோணுது .அவங்க வசன உச்சரிப்பும் தமிழ் ஆளுமையும் பார்த்தா உடம்பே மெய்  சிலுர்க்குது. ஹீரோக்கு சப்போர்டிங் ரோல்ல அப்பப்ப சில பேர் வந்துட்டு போறாங்க .அதுல குறிப்பா லெனின் , மாங்கா மணி ,ஹிமான் குறிப்பிடத்தக்கவங்க . அதுல மாங்கா மணிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மாதிரி பழைய ஞாபகம் வந்து புக்ல ஸ்டிக்கர் ஒட்ட  கிளம்பிடறாரு . விறுவிறுப்பா போயிட்டு இருக்க படத்து நடுவுல லெனின் பிறந்தநாள் கொண்டாடறது கொஞ்சம் கொட்டாவியை வரவைக்குது . படத்துல வில்லன்களுக்கு பஞ்சமே இல்ல .வரிசையா வந்துகிட்டே இருக்காங்க. பொதுவா ஹீரோக்களோட தான் காமெடியன் வருவாங்க . ஆனா ஒரு மாறுதலுக்காக இங்க வில்லன் கூட  வராங்க .காவி தலைமை வில்லன் ரொம்ப கொடூரமா இரக்கமற்றவனா காமிச்சாலும் இவன் கூட இருக்க அடியாட்கள் நிறையவே காமெடி பண்ணறாங்க. அவங்க தனியா வந்து ஹீரோ கூட்டத்துல மீம்ஸ் ட்ரோல் னு அடி வாங்கிட்டு போறது வயிறு வலிக்க சிரிக்கவைக்குது .வெளி நாட்டுல இருந்து ஏமாத்து பொழப்பு தேடிவந்த பச்சை, வெள்ள சட்டக்காரங்க இந்த காவி தலைவனால  பாதிக்க பட்டு இருங்காங்க.
 இந்த ஹீரோ கூட்டம் வில்லனா அடிக்கிறத பார்த்த பச்சை, வெள்ள சட்ட போட்ட வில்லன்கள் இதுதாண்டா சமயம்னு காவி தலைவனா ஒரு புடி புடிக்கறாங்க. அப்ப ஏகப்பட்ட லாஜிக் அத்துமீறல்கள் பார்க்க முடிகிறது.,இது படத்துக்கு ஒட்டவேயில்ல .

படத்துல நிறைய டெக்னிகள் விஷயம் பேசறது மக்களுக்கு கொஞ்சம் புரியாம போகுது . இன்னும் அத பாமர மக்களுக்கு புரியற மாதிரி சொல்லியிருக்கலாம்.படத்துல மியூசிக் கேமராமேன்னு வர பந்தி,பழைய தலைமுறைகாரங்க  அவங்க பங்க சிறப்பா பண்ணிட்டு போய் இருக்காங்க .
மொத்தத்தில் இதுவும் மாணவர்களின் வெற்றி படமாகவே கருதப்படுகிறது .

மீண்டும் அடுத்த ஓர் புது பட விமர்சனத்துல சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் . நன்றி வணக்கம்


https://www.facebook.com/sivakuru.manimozhi/posts/1836690479938178

No comments:

Post a Comment